சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்க கோரிக்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்க கோரிக்கை

Update: 2022-05-09 17:07 GMT
அண்ணாமலைநகர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முதல் பட்டதாரி உதவித்தொகையை உடனடியாக வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். 

இதை அறிந்த பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பிரகாஷ், வேளாண் புல முதல்வர் சுந்தரவரதராஜன், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜ், மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதல் பட்டதாரி உதவித்தொகை கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்