அண்ணா தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தேனி அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேனி:
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவையின் அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்து ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சற்குணம், அண்ணா தொழிற்சங்க தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வீ.அமீது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.