காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
நாகூர், காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
நாகூர்:
நாகூர் சிவன் தெற்கு வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் திரவியத்துள், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.