மாநகராட்சி மெத்தனத்தால் 3 நாட்களாக ரோட்டில் கிடக்கும் மரம்
மாநகராட்சி மெத்தனத்தால் 3 நாட்களாக ரோட்டில் கிடக்கும் மரம்
திருப்பூர்;
திருப்பூரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி இரவு திருப்பூர் மாநகர பகுதியில் பலத்த காற்று வீசியதில் கோர்ட்டு வீதி, போலீஸ் குடியிருப்பு அருகே இருந்த ஒரு மரம் முறிந்து விழுந்தது. நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மரம் ரோட்டின் குறுக்காக விழுந்ததால் இவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ள நிலையில் மரம் அகற்றப்படாமல் இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த மரத்தை அகற்றக்கோரி இப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 3 நாட்களாக நடுரோட்டில் கிடக்கும் மரத்தை அகற்ற அதிகாரிகளுக்கு இன்னும் நேரம் கைகூடவில்ைலயா? என பொதுமக்கள் ஆதங்கம் கொள்கின்றனர். முன்னேற்றத்தை நோக்கி வேக நடை போட ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், இது போன்ற தவறுகளை களையுமா?.