வக்கீலுக்கு கத்திக்குத்து; நண்பருக்கும் அடி-உதை

இளையான்குடி அருகே வக்கீலுக்கு கத்திக்குத்து விழுந்தது. அவரது நண்பருக்கும் அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-05-09 16:50 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே வக்கீலுக்கு கத்திக்குத்து விழுந்தது. அவரது நண்பருக்கும் அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வக்கீலுக்கு கத்திக்குத்து

இளையான்குடி அருகே உள்ள உச்சந்தட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). வக்கீல். அதே கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(24). இவர்கள் 2 பேரும் உச்சந்தட்டு கண்மாய் கரைப்பகுதியில் நின்றிருந்தனர். அப்போது தாயமங்கலத்தை சேர்ந்த விக்ரம் என்பவர், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த மாரிமுத்துவும், அஜித்தும், விக்ரமிடம் இந்த பகுதிக்கு பெண்ணை அழைத்து வந்து பேச கூடாது என கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் மறுநாள் இளையான்குடியில் கோர்ட்டு வேலை முடிந்து மாரிமுத்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, உச்சந்தட்டு பகுதியில் விக்ரமும், அவரது நண்பர்களும் வழிமறித்து நிறுத்தினர். அவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரது நண்பரான அஜித்தையும் வரவழைத்து அவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் வக்கீல் மாரிமுத்துவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்துவும், அஜித்தும் சிகிச்சைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றனர்.

3 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீசார் 10 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பாக தாயமங்கலத்தை சேர்ந்த விக்ரம்.(வயது 21), கீழியேந்தல் பிரசாந்த் (24), தாயமங்கலத்தை சேர்ந்த அனீஸ்குமார்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து திருப்புவனம் நீதித்துறை நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்