அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-09 16:43 GMT
கரூர்
கரூர், 
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கரூர்-2 வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணை வட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம், வட்ட செயலாளர் செல்வன், மாவட்ட இணை செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதேபோல் தோட்டக்கலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்