ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-09 18:30 GMT
வேதாரண்யம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் ஒன்றிணைந்து வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரண்யம் ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, தலைஞாயிறு ஒன்றிய தலைவர் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். வேதாரண்யம் செயலாளர் அரங்கநாதன், தலைஞாயிறு செயலாளர் ஞானசம்பந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்க பேசினர்.
இதில் அனைத்து அரசு ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் மதிவாணன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகவிலைப்படி
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவ படி, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்