தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 130 பேர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தை அறிவித்தபடி சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில் அங்கு சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள், பொது வினியோகத்திட்டத்திற்கென தனித்துறையும், பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு, சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிகாலமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
130 பேர் கைது
உடனடியாக நிர்வாகி முத்துக்குமார், மாவட்ட தலைவர்கள் மணி, ரமேஷ்பாபு, சுரேஷ், நாகராஜன் உள்பட 130 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.