தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம்
வாய்மேடு:
வாய்மேடு அடுத்த தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ற ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம், துணைச் செயலாளர் நாராயணன், ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் ஆகியோர் கலந்து பேசினார்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேதாரண்யம் பகுதியில் விளைவிக்கப்படும் மூலப்பொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.வேதாரண்யம் பகுதிக்கு வாய்மேடு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.முடிவில் ஒன்றிய தலைவர் பாலகுரு நன்றி கூறினார்.