சேங்கல் மலை பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சேங்கல் மலை பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து செம்பருத்தி பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல மண்மங்கலம் மணிகண்டேஸ்வர் கோவில், நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர், காகிதபுரம் காசி விஸ்வ நாதர் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள பைரவருக்கு அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.