அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-09 16:25 GMT
சீர்காழி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் இளவரசன், வட்டச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் மாநில அரசை கண்டித்து பேசினர். 
ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணைத் தலைவர் ராமதேவன் நன்றி கூறினார். இதேபோல, சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பும், தாசில்தார் அலுவலகம் முன்பும் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்