பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Update: 2022-05-09 16:24 GMT
கரூர்
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி நர்சரி மூலம் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் புங்கன், பூவரசு, புளியங்கன்று, வேம்பு கன்று, பெரிய நெல்லிக்காய் உள்ளிட்ட 7 வகையான மரக்கன்றுகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மரக்கன்றுகளை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்