சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

சாலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-09 16:18 GMT
கரூர்
நொய்யல், 
நொய்யல் அருகே சேமங்கி பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 43). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் சென்று தனது குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் நோக்கி எதிர்திசையில் திருப்பூர் காங்கேயம் ரோடு அங்காள பரமேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்த பிரபு (27) என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தங்கவேல் ஓட்டி வந்த ேமாட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த தங்கவேல் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் பிரபு மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்