அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சீர்காழி
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் துறையில் ஓய்வூதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராஜ்மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரெஜினா வைலட் ரோஸ்லின் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.