பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி நடக்கிறது.

Update: 2022-05-09 15:39 GMT
பழனி:
பழனி அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த பல்வேறு புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. அதன்படி இந்த மாதம் பழங்கால நாணய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் ராஜராஜ சோழன், சமுத்திர, சந்திரகுப்தர் கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், இந்த நாணய கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது என்றார்.

மேலும் செய்திகள்