நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாச்சியாா் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜித் (வயது 29). இவர் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தற்போது போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி சுஜித் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சுஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கன்னியாகுமரி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.