கோத்தகிரி
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 25). ஊட்டியில் கிரேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலையில் கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார். கொட்டக்கம்பை அருகே சென்றபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கிரேன் திடீரென சாலையோரம் இருந்த சுவர் மீது மோதியது.
இதில் பேச்சிமுத்து பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.