தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-09 13:38 GMT
கீழ்பென்னாத்தூர்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பகல் நேர உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், அரசு ஊழியர் சங்க வட்ட கிளை துணைத் தலைவர் லட்சுமணபெருமாள், சத்துணவு ஊழியர் சங்கமாநில துணைத் தலைவர் அண்ணாதுரை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட கிளைசெயலாளர் வடிவேல், வட்ட கிளை துணைத் தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கைகை விளக்கி பேசினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வு திட்டம் சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்