துர்க்கை அம்மன், பிரசன்ன வெங்கடாசலபதி, அனுக்ரக பாபா கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம் அருகே வாரணவாசி ஊராட்சி தாழையம்பட்டில் புதியதாக துர்க்கை அம்மன், பிரசன்ன வெங்கடாஜலபதி, அனுக்ரக பாபா கோவில்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேகம் விழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-05-09 12:29 GMT
இதில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த விழாவில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார், காஞ்சீபுரம் மாவட்ட அறநிலையதுறை உயர் அதிகாரி வான்மதி, மாற்றுத்திறனாளிகள் வாரியத் உறுப்பினர் தங்கம், மற்றும் உபயதாரர்கள் தொழிலதிபர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கோவில் குருக்கள் பிரசாதங்களை வழங்கினார்கள்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.மோகனசுந்தரம், வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம், தொழிலதிபர்கள் எம்.வினோத்குமார் எம்.பிரித்திவிராஜ் மற்றும் தாழையம்பட்டு கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறும்போது, வரும் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோவில்களில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்படும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகளை செய்ய ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்