தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்திய மாபெரும் பாட்டுப்போட்டி
தினத்தந்தியும், வி.ஜி.பி.யும் இணைந்து தங்கள் வாசகர்களுக்காகவும், வாடிக்கையாளர்களுக்காகவும் தங்க கடற்கரையில் கோடை விழா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில், 3-வது வார நிகழ்ச்சியாக மாபெரும் பாட்டுப்போட்டி நேற்று நடத்தப்பட்டது.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கான பரிசுகளை வி.ஜி.பி. நிறுவனம் வழங்கியது.முதல் பரிசான எல்.இ.டி. கலர் டி.வி.யை சூர்யாவும், இரண்டாம் பரிசான பிரிட்ஜை கோபிகாவும், மூன்றாம் பரிசான ஆடியோ சிஸ்டத்தை ஜாக்குலினும் பெற்றனர். ஏராளமானவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.பி. ரவிதாஸ் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இளம் பெண்கள் அதிக அளவில் பரிசுகள் பெற்றனர். நடுவர் பாடகர் வேல்முருகனுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி நடனப்போட்டி நடைபெறுகிறது. இதில் 15 முதல் 25 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம்.