தீ விபத்தில் 100 குடிசைகள் எரிந்து நாசம்- சிறுமி மாயம்

நாக்பூர், பெல்டரோடி பகுதியில் மகாகாளி நகரில் உள்ள குடிசை பகுதியில், நேற்று காலை 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-09 11:43 GMT
நாக்பூரில் தீ விபத்து
நாக்பூர், 
  நாக்பூர், பெல்டரோடி பகுதியில் மகாகாளி நகரில் உள்ள குடிசை பகுதியில், இன்று காலை 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பற்றிய தீ, மளமளவென பரவி அடுத்தடுத்த குடிசைகளில் பரவி அனைத்தும் பற்றி எரிய தொடங்கின. 
  இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடிசை பகுதியினர், தண்ணீரை கொண்டுவந்து ஊற்றி தீயை அனைக்கும் முயற்சியில் இறங்கினர். 
  இதற்கிடையே, தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். 
  நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, குடிசைகளில் எரிந்த தீயானது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீவிபத்தில் கிட்டத்தட்ட 100 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிகிறது. 
  தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றபோதும், ஒரு சிறுமியை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். 
  தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
  இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
-----

மேலும் செய்திகள்