கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
காவேரிபாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை முகாம் நடைபெற்றது. உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்திருந்தனர். மாரியம்மன் கோவில் தெருவில் நடந்த முகாமினை பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், செயல் அலுவலர் ப.மனோகரன், வார்டு உறுப்பினர்கள் நரசிம்மன், உமா, காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் இளங்கோ ஆகியோர் முகாமினை பார்வயிட்டனர்.