கிருஷ்ணகிரி வழியாக சென்ற கர்நாடக மாநில கவர்னருக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி வழியாக சென்ற கர்நாடக மாநில கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-09 05:13 GMT
கிருஷ்ணகிரி:
கர்நாடகா மாநில கவர்னர் தாவார்சந்த் கேலாட், வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்க கோவிலுக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றார். வழியில், தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி அருகில் உள்ள சுண்டம்பட்டி பர்சவ பத்மாவதி கோவிலுக்கு கவர்னர் சென்றார். அங்கு அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து, காலை 10 மணிக்கு புறப்பட்ட கவர்னர் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.  தரிசனம் முடிந்து அவர் மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார்.

மேலும் செய்திகள்