இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் மாணவர்கள் பயன்

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

Update: 2022-05-08 19:38 GMT
விருதுநகர், 
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார். 
பாடம் கற்பித்தார்
 விருதுநகர் அருகே உள்ள மீசலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்ட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரடியாக ஆய்வு செய்தார். அத்துடன் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார். மேலும் தன்னார்வலர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவது குறித்தும், மாணவர்களின் வருகையை குறித்தும் கேட்டறிந்த கலெக்டர் மாணவர்களிடம் பாடங்கள் எந்த முறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பது குறித்தும் உங்களின் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? நீங்கள் உங்களின் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் இந்த மையத்திற்கு வருகை புரிந்து நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்த்து 
 நீங்கள் நடைபெறும் தேர்வினை நன்றாக படித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குழந்தைகளின் பெற்றோர்களிடம் புராண காலத்தில் குழந்தைகள் என்ன செய்தார்கள் என்றும், இத்திட்டத்தின் மூலம் எவ்வாறு பயன் அடைந்து வருகிறார்கள் என்றும் கேட்டறிந்தார். தினமும் இல்லம் தேடி கல்வி திட்ட மையத்திற்கு தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் 72 ஆயிரம் பேர் விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 3,695 மையங்களில் 3,658 தன்னார்வலர்கள் மூலமாக 72 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்