நகை திருட்டு
காரியாபட்டியில் பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை திருடி சென்றனர்.;
காரியாபட்டி,
காரியாபட்டி, பாம்பாட்டி சாலை, மருதுபாண்டியன் நகரில் வசித்து வருபவர் ராமர். ராமரின் மனைவி பூங்கொடி தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அதன்பின்னர் ராமரும் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் பூங்கொடி வந்து வீட்டை திறந்து பீரோ சாவியை பார்த்தபோது பீரோ சாவி காணவில்லை. பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.