ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் தற்கொலை

விருதுநகரில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-08 19:14 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மீனாட்சி (வயது 29). இவர் அம்மாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஸ்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது முத்து மது அருந்தியதால் முத்துவுக்கும், மீனாட்சிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து மீனாட்சி வீட்டில் இருந்த எறும்பு பொடியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மீனாட்சி தனது தோழி ரேணுகாவிடம் தெரிவித்துள்ளார். ரேணுகா, மீனாட்சியை அம்மாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மீனாட்சி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து  மீனாட்சியின் தந்தை ஆறுமுகம் (53) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்