வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

மதுரையில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-05-08 19:00 GMT
மதுரை,

மதுரை கான்சாபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் தாவூத்கான் (வயது 29). சம்பவத்தன்று இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை, ரூ.3500 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்