கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-08 18:48 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கல்லூரி ஆசிரியர்களுக்கு இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி மேம்பாடு உடனடியாக வழங்க வேண்டும். அரசாணைகளை அமல்படுத்த மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகில இந்திய பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு துணைத்தலைவர் ரவி, பொதுச்செயலாளர் நாகராஜன், துணைத்தலைவர் நசீர் அகமது, செயலாளர் ராஜ ஜெயசேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் மண்டல செயலாளர் சிவஞானம் உள்பட கல்லூரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்