குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2022-05-08 18:36 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராம மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த மினி குடிநீர் தொட்டி, கைப்பம்பு ஆகியவை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது பழுதடைந்துள்ளது. 

இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு காலி குடங்களுடன் அலைந்து திரிய வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்