இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு மாநாடு நடைபெற்றது.

Update: 2022-05-08 18:14 GMT
கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 11-வது ஒன்றிய மாநாடு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உலகநாதன், துணைத்தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும், திருமானூரை தாலுகாவாக மாற்ற வேண்டும், இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்