அரசு பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்
அரசு பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
சங்குபேட்டையில் உள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை ஷம்ஷின்னிசாபேகம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, நகர்மன்ற உறுப்பினர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக கவிதாவும், துணைத் தலைவராக தனலெட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் பயிலும் இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். நினைத்ததை செயல்படுத்தலாம் என்று பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார்.