பா.ம.க. நகர செயலாளர் நியமனம்
பா.ம.க. நகர செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் டாக்டா் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலோடு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு காடுவெட்டி நா.ரவி என்ற ரவிசங்கர் பரிந்துரையின்பேரில் ஜெயங்கொண்டம் சரோ ஏஜென்சிஸ் உரிமையாளரான பரசுராமன் ஜெயங்கொண்டம் நகர பா.ம.க. செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தலைமை கழகம் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் உள்பட 48 புதிய பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர் ரவிசங்கர் பரிந்துரையின் பேரில் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.