2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

Update: 2022-05-08 17:53 GMT
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் ( வயது 30). இவர் நேற்று முன்தினம் மதியம் ஒரு வீட்டுக்குள் நாய் குட்டியுடன் புகுந்தார்.
அப்போது அந்த வீட்டில் 4 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுமி ஆகியோர் இருந்தனர். நாய் குட்டியை பார்த்ததும் அஸ்வின் அருகில் 2 சிறுமிகளும் சென்றனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல் நடித்து, 2 சிறுமிகளுக்கு அஸ்வின் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமிகள் அழுதனர்.
கைது
உடனே அஸ்வின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் அஸ்வின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
புகார்
அதே சமயத்தில் மார்த்தாண்டம் போலீசில் அஸ்வின் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் சம்பவத்தன்று காலையில் வேலைக்கு செல்லும்போது அந்த பகுதியில் 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியை தூக்கி முத்தம் கொடுத்து விட்டு சென்றேன். மாலையில் திரும்பி வரும்போது அந்த சிறுமியின் தந்தை மற்றும் மோகன்தாஸ், அருண் ஆகிய 3 பேரும் ‘குழந்தையை என்ன செய்தாய்’ என்று கேட்டு தாக்கி என்னை மரத்தில் கட்டி வைத்தனர். தான் அலறவே பக்கத்தில் உள்ளவர்கள் என்னை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
3 பேர் மீது வழக்கு
அந்த புகாரின் அடிப்படையில் மோகன்தாஸ், அருண் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்