தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடைகளில் வர்ணம் பூச கோரிக்கை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காகித ஆலை பகுதியில் தேவையற்ற முறையில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. மேலும் வேகத்தடைகள் அனைத்தும் மிகவும் சிறியதாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புன்னம் சத்திரம், கரூர்.
புதர்மண்டி காட்சியளிக்கும் பொது கழிவறைகள்
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் குளிர்ந்த மலை மாணிக்க தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பொது கழிவறைகள் ஒன்று உள்ளது. தற்போது அந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. இதனால் கழிப்பறைகளை சுற்றி முட்செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியும், சுற்றியுள்ள முட்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம்.