மோட்டார் சைக்கிள் தடுப்புக் கட்டையில் மோதி அழகு நிலைய மேலாளர் பலி
கரூரில் மோட்டார் சைக்கிள் தடுப்புக் கட்டையில் மோதி அழகு நிலைய மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
கரூர்
அழகு நிலைய மேலாளர் பலி
பெரம்பலூர் மாவட்டம், அம்மா பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவர் கரூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் சாலையில் சுக்காலியூர் மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள தடுப்புக்கட்டையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.