இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய மாநாடு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய மாநாடு நடந்தது.
க.பரமத்தி,
க.பரமத்தியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய 10-வது மாநாடு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்ராயன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பாரதி, மாவட்ட செயலாளர் ரத்தினம் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் க.பரமத்தியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். பெரியதாதம்பாளையம் ஏரியை தூர்வாரி விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 200 நாள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.