மனைவியை குத்தி கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை முயற்சி- மால்வாணியில் சம்பவம்

மால்வாணியில் மனைவியை குத்தி கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-05-08 17:26 GMT
கோப்பு படம்
மும்பை, 
மும்பை மால்வாணி மத் சிவாஜி நகரை சேர்ந்தவர் சம்ரூதின் சேக்(வயது 75). இவரது மனைவி மும்தாஜ்(70). இந்நிலையில் மும்தாஜ் தன்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என கூறி சம்ரூதின் சேக் அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.  
கடந்த 6-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் அவர்களுக்கிடையே வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் தலைக்கேறிய சம்ரூதின் சேக் சமயலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து, மும்தாஜை கழுத்து, வயிறு போன்ற இடங்களில் சரமாரியாக குத்தினார். இதனால், படுகாயமடைந்த மும்தாஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் பயந்துபோன சம்ரூதின் சேக் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் தன்னை தானே கத்தியால் குத்தி கொண்டார். 
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம்போட்டார். இவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த சம்ரூதின் சேக்கை மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடைய தகவல் அறிந்த மால்வாணி போலீசார் அங்கு சென்று கொலை செய்யப்பட்ட மும்தாஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்