மணல் திருடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
மணல் திருடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நொய்யல்,
வாங்கல் அருகே உள்ள காவிரி ஆற்றுப் படுகை பகுதியில் மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாட்டு வண்டியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு வந்த 2 பேர் தங்களது மாட்டு வண்டிகளையும், மாடுகளையும் அங்கேயே விட்டு, விட்டு தப்பியோடினர். இதையடுத்து மணலுடன் 2 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்