இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லை காளி குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும், அந்த யூடியூப் சேனலை நடத்திவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும் சிதம்பரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினர் கீழவீதி நடராஜர் கோவில் வாசலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து போல்நாராயணன் தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் மாமல்லன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக் குமார், பா.ஜனதா நகர தலைவர் ரகுபதி, நிர்வாகிகள் ஸ்ரீதர், கோபிநாத், ஆடிட்டர் பாலசுப்பிரமணியன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.