பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-08 17:18 GMT
கரூர்
கரூர்
கரூர் வேலம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சீலா (வயது 37). இந்தநிலையில் சதீஷ்குமாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சீலா  தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீலாவின் தந்தை முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்