ஆட்டோ டிரைவர் மர்ம சாவு

பண்ருட்டியில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2022-05-08 17:10 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி கணபதி நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று ராஜா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர் ஒருவர் விழுப்புரம் மந்தக்கரையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் பதறி அடித்து கொண்டு விரைந்து வந்தனர். அப்போது அங்கு ராஜா இறந்து கிடப்பதை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாவின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்