வீரமகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு

இலுப்பூர் வீரமகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update: 2022-05-08 18:30 GMT
சிக்கல்:
 கீழ்வேளூர் அருகே இலுப்பூர் மேலத்தெருவில் வீரமகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்்து நேற்று  குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 6-ந்தேதி கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி  சித்தி விநாயகர், மகா மாரியம்மன், கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்