கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி
கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நடந்தது
கரூர்,
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் கிராமத்தை நோக்கி காவல்துறை என்ற நிகழ்ச்சி தந்தோணிமலை கருப்பம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பங்கள் நடைபெறும்போது அச்சமின்றி காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டம் பற்றியும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களிலிருந்து பெண்களை பாதுகாத்து கொள்ள காவல்துறை மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், 1098 என்ற எண்ணின் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் வீட்டில் உள்ள மூத்த குடிமக்களை மரியாதையுடனும், அவர்களை நல்ல முறையிலும் பேணிபாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இதில் கருப்பம்பாளையம் ஊர் பொதுமக்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.