மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த வியாபாரி சாவு
எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்் தேதி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, நிம்மியம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். வாணியம்பாடி தும்பேரி அம்பேத்கர் நகரை சேர்ந்த பழவியாபாரி பழனி (வயது 55) என்பவர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவருடைய உறவினர் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.