தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம்
தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டம் நடந்தது
நொய்யல்,
தி.மு.க. அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டாணா பகுதியில் கரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், புகழூர் நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன் மற்றும் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்காடுதுறை, கோம்புப் பாளையம், சேமங்கி, மரவாபாளையம், நொய்யல் குறுக்குச்சாலை, வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.