பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம்: மாணவர் மீது வழக்கு
பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கரூர்,
கரூர் மாவட்டம், பாகநத்தம் கிராமத்திற்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா, பிளஸ்-2 படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து கடத்தி சென்று பாலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கரூர் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, கல்லூரி மாணவர் சூர்யா மீது வழக்குப்பதிந்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்.