தங்க ஹம்ச வாகனத்தில் பக்தோசிதப் பெருமாள் உலா
சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாள் தங்க ஹம்ச வாகனத்தில் பக்தோசிதப் பெருமாள் உலா வந்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாள் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசிதப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது.
தங்க ஹம்ச (அன்னப்பறவை) வாகனத்தில் பக்தோசிதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு பைராகி மடத்தெரு, தபால் அலுவலக தெரு, பஜார் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுக பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.