வெண்ணாற்றில் புதர்மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றில் புதர்மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றில் புதர்மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகாய தாமரை செடிகள்
கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் லெட்சுமாங்குடி பாலம் தொடங்கி பொதக்குடி, பாய்க்காரத்தெரு பாலம், பண்டுதக்குடி பாலம் மற்றும் காடுவெட்டி தெரு வரை அதிகளவில் ஆகாய தாமரை செடிகள் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையால் அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அகற்ற வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றில் புதர்மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
--