தெருவில் கிடந்த பொருளை சாப்பிட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு

ஜோலார்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தெருவில் கிடந்த பொருளை சாப்பிட்டதில் மயங்கி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

Update: 2022-05-08 14:55 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தெருவில் கிடந்த பொருளை சாப்பிட்டதில் மயங்கி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

தெருவில் கிடந்த பொருள்

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் லட்சுமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது பேத்தி மோனிகா (வயது 1). சம்பவத்தன்று வீட்டின் அருகே குழந்தை மோனிகா விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கிழே கிடந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், குழந்தையை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இது சம்பந்தமாக கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாடிய குழந்தை கிழே கிடந்த விஷப்பொருளை சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்