தூத்துக்குடி அருகே ஆட்டோ மோதி முதியவர் சாவு
தூத்துக்குடி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் பரிதாபமாக பலியானார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி டேவிஸ்புரத்தை சேர்ந்தவர் சேகர் என்ற வடிவேல் (வயது 60). இவர் நேற்று முன்தினம் தாளமுத்துநகர் சத்யா தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வழியாக வந்த ஆட்டோ, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.